Iznogoud Translation


Page 001
----------------------
கண்ணுக்குத்தெரியாமல் ஒரு கேடு!



கலீபா ஹரூன் அல் குட் பாய் தன் மாலைப் பொழுதுகளை, இளம் நாட்டுப்புறப் பாடகன் மிக் ஜஹாவின் காட்டுக்கத்தல்களைக் கேட்டவாறே இனிமையாய்க் கழித்துக்கொண்டிருக்க....

அடியே.... என்ன எங்கே நீ கூட்டிப் போற...?

நல்லதொரு ஐடியாவுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருந்தார் சூழ்ச்சிகளின் மொத்த உருவமான மந்திரி நா மோடி மஸ்தான்!


ஆ... கலீபாவுக்குப் பதிலா நான் ஆகணுமே கலீபா!!

அவரது விசுவாசமிக்க முரட்டு ஊழியன் ஜால்ராபாய் வடிவில் வந்தது ஐடியா!


என்னால காலீபா ஆகமுடியலன்னா..அந்த காலி டப்பா கலீபா என் கண்ணுல படவேகூடாது!

மாஸ்டர்... அது எப்டீன்னு சரியா சொல்லத் தெரியல... ஆனா, கலீபா உங்க கண்ணுலயே படாம இருக்கறத்துக்கு ஒரு வழி இருக்கற மாதிரி தோணுது...


நம்ம ஊருக்கு ஜப்பாலக்கடி ஓமர்னு புதுசா ஒரு மந்திரவாதி வந்திருக்காரு. அவரால எந்தப்பொருளையுமே கண்ணுல படாம மறைச்சுட முடியுமாம்னு பேசிக்கிறாங்க!


இதையேன் முன்னாடியே சொல்லல முட்டாப்பயலே? வா, உடனே அங்கே போவோம்!

உங்க நெலம இம்புட்டு மோசமா ஆவும்னு நெனக்கல மாஸ்டர்...


அதுமட்டுமில்லே... இதுக்கு முன்னாடி உங்ககிட்டயே சூப்பரான ப்ளான்லாம் இருந்துச்சே மாஸ்டர்....

வாய மூடிக்கிட்டு என்ன அந்த ஓமர் வீட்டுக்கு கூட்டிப்போ!

கலீபாவ யாராலயும் பார்க்கமுடியாமப் போச்சுன்னா, கலீபா இல்லாதமாதிரிதான்! அப்புறம் ஆட்டோமேடிக்கா நான்தானே கலீபா! ஹி..ஹி...




இதோ, வந்துட்டோம் மாஸ்டர்!

கதவை திறந்தே வச்சிருக்காரு. என்ன ஒரு வரவேற்பு! நீ இங்கேயே இரு, நான் உள்ளே போறேன்!

தொமேர்!!!!

யம்மா.....டி!


Page 002
----------------------

இப்போ வரலாம்!

மன்னிக்கணும் அன்பரே! உறுதியான என்னோட ஓக் மரக் கதவை மத்தவங்களால பார்க்கமுடியாதுங்கறத நான் அடிக்கடி மறந்துபோயிடறேன்.

எச்சரிக்கையாவே இருங்க.. நேரம் கெடைக்காததால எதையும் சரிபண்ண முடியறதில்ல.. இதோ இந்த கருங்காலி மரத்துல செஞ்ச ஸ்டூலக்கூட...

பரவாயில்ல.. பிரம்மச்சாரியோட வீடு எப்படியிருக்கும்ணு எனக்கும் தெரியும்.


இந்த கூடை நாற்காலில உட்கார்றீங்களா?

இப்ப சொல்லுங்க... நீங்க யாரு?

நான், நா மோடி மஸ்தான்...

நான் இங்கே… இந்தப் பக்கத்திலேர்ந்து...

கவனிங்க..!

போச்சு!

சளேர்!

என்னோட அழகான நீல நிற பீங்கான் பூச்சாடி!! பீஸ் பீஸா சிதறிப்போச்சே!

தபாருங்க... எந்தப் பொருளையும் உங்களால மறையவைக்க முடியும்னு கேள்விப்பட்டேன். அது உண்மையா?

அது தெரிஞ்ச விசயம்தானே?

அந்த வித்தை எனக்கும் தெரியணும்!

அன்பரே, அருமையானவரே... அதுக்கு ரொம்ப செலவாகுமே, நைனா!

எவ்வளவு?

ஒரு லட்சம் டிராம்கள்!

முடியாது!

ஐம்பதினாயிரம்!

முட்டாளாப்பா நீயி?

கடேசியா கேக்குறேன், நாப்பதினாயிரம்!

பத்தாயிரம், அவ்வளவுதான்!

சரி! ஆனாலும் இது பகல் கொள்ளைப்பா!!



Page 003
----------------------

இப்ப சொல்லுங்க அந்த ரகசியத்த?

பணத்தை இந்த மரப்பெட்டில வைங்க. என்னோட கஸ்டமர்கள்கிட்ட நான் எப்பவும் நேர்மையா நடந்துக்குவேன். அவங்களுக்கு என்னோட ரகசிய மந்திரத்தை சொல்லீட்டேன்னா, அதுதான் அவங்கள நான் பாக்குற கடேசீ தடவையா இருக்கும்.


இந்தாங்க.. எடுத்துக்குங்க...

ஓ... கவனம்... என்னோட பிங்க் கலர் சைனாப் பூச்சாடி!

யாரையாவது, இல்லேன்னா எதையாவது மறைய வைக்கணும்னா..அவங்க, இல்லீன்னா அது முன்னாடி இப்படி கண்ணுமேல கையவச்சு நின்னுக்கிட்டு, ''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..'' னு சொல்லணும்!


அம்புட்டுதானா?

ஆமா. ஆனா ஞாகம் வச்சிக்குங்க. நீங்க மந்திரம் சொல்றப்ப அந்தப் பொருள் இல்லீன்னா ஆளு, ஆடாம அசையாம கம்முனு இருக்கணும்!


உங்கள நம்பலன்னு இல்ல... ஆனா, இது சரியா வொர்க் ஆவுதான்னு செக் பண்ணிக்கிறேன்! ஜால்ரா பாய், ஓடி வாப்பா!

வந்துட்டேன், மாஸ்டர்!

தட்..டா...ர்!!

கதவத் தொறந்துட்டுவாடா, தடிமாடு!


அசையாதே!
''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..''

ஙே?

அற்புதம்! காணாமலே போய்ட்டானே!

நான் சொன்னேன்ல?

வா போலாம் என் செல்லப்பையா, ஜால்ரா பாய்!

'கண்காணாமக் கரைஞ்சு போயிடுனு' சொல்றத்துக்காகவா என்னக் கூப்பிட்டீங்க, மாஸ்டர்?


கவனிங்க!

இங்க வர்ரவங்க எல்லாருமே சொல்லிவச்சா மாதிரி, அந்தப் பூக்கள் வச்சிருக்கற டேபிள்மேல இடிச்சுக்கிறீங்களே! கண்ணு தெரியறதில்லையா, என்ன?

மாஸ்டர்! இங்க நடக்குறது எல்லாமே ரொம்ப காமெடியா இருக்கில்ல?


Page 004
----------------------

அரண்மனைக்குப் போவோம், வா!

மாஸ்டர்!
இங்கப் பாருங்க!!!


இப்ப,
இங்க என்ன?


கவனிச்சீங்களா? நான் கண்ணுக்கு தென்படாம மறைஞ்சிட்டேன்!


அதுக்கு என்ன இப்போ?


இன்னாவா? நான் எப்டி மாஸ்டர் ஷேவ் பண்ணிக்கிறது?


இங்கேயே இரு, வரேன்!

அப்படியே ஆகட்டும், மதி மந்திரியாரே!

அது உனக்கு இல்லேப்பா!

ஐயோ, காப்பாத்துங்க! காப்பாத்துங்க!!


‘கண்ணுக்குத் தெரியாத மனிதனை இதுவரைக்கும் நீ பார்த்ததேயில்லையா?’ன்னு இவன எல்லாரும் கேலி பண்ணப்போறாங்கப்பா!


என்னருமை மதி மந்திரி! உங்களப் பார்த்து பல வருஷங்கள் ஆனதுபோல இருக்கு... எங்கே போயிருந்தீங்க?

நான் சொல்றத ஆடாம அசையாம கேளுங்க மன்னா!


''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணா..''

என்ன இது பைத்தியக்காரத்தனம்?

ஐயோ! இது ஒரு விளையாட்டு, மன்னா! சட்டுனு முடிஞ்சிரும்!!

எனக்கு இந்த வெளாட்டு பிடிக்கல!

ஒரே தடவை... ஒரே ஒரு தடவை... எனக்காக..ப்ளீஸ்!



Page 005
----------------------


சரி..சரி.. அழ வேணாம்! ஆனா, ரொம்ப நேரம் எடுத்துக்கப்படாது... ஆமா!

இத சீரியஸா எடுத்துக்கவேணாம்... சும்மா லுல்லலாயி... அவ்ளவுதான்!


''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..''


ம..மறைஞ்சுட்டாரு!

நா..நான்.. சாதிச்சுட்டேன்! சாதிச்சுட்டேன்!!! சாதிச்சு...


மந்திரி...


உங்களுக்கும் ஒரு கப் காப்பி தரவா?


நான் உங்கள அசையக்கூடாதுன்னுல்ல சொன்னேன்?


நான் காப்பி குடிக்கத்தானே போனேன்?


இந்த வெளாட்டும் சூப்பரா இருக்கும்போலத்தான் தெரியுது... ஆனா, இப்போ நீங்க கௌம்புங்க.. எனக்கு தூக்கம் கண்ணச் சுத்துது.

ஆனா, ஒரு நிமிஷம்... மேன்மை மிகு மன்னா...


இப்ப வேணாம்... இன்னொருநாள்... நாளைக்கு... ஹா....வ்..வ்..

பாருங்க மாஸ்டர்! நான் இன்னும் இங்கேயேதான் இருக்கேன்..

இப்ப என்ன பண்றது?

என்னை மறுபடி கண்ணுக்கு தெரியறமாதிரி மாத்திடுங்க மாஸ்டர்!

ஐடியா!

பாருங்க... (க்ரஷ்...!)  நான் நல்லா இருக்கேனான்னே எனக்கு தெரில... அப்புறம் எப்டி நான் டாக்டர்கிட்ட போறதாம்?




Page 006
----------------------


டாக்டரப் போய் பார்க்க முடியலன்னா.. அவரு எப்டி என்னோட நாக்கப் புடிச்சு 'செக்' பண்ணுவாரு?

வா, போலாம்!

ச்சே...எப்பப்பாரு... தோல உறிக்காமலே கறியச் சமைச்சுடுறாங்க...

ஜால்ரா பாய்! யார் கண்ணுலயும் பட்டுறாத... அகப்பட்டோம்னா கழுத்துமேல தலை இருக்காது!

என்னைய என்னாலயே பார்க்கமுடிலையே... அப்புறம் வேற யாராவது எப்புடி...?

பயங்கர இருட்டா இருக்கே!

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா, மாஸ்டர்?


''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..''


இந்தத் தடவ பிசகில்லாம சாதிச்சுட்டேன்னு நெனக்...

அலோ மந்திரியாரே! இந்த நடு ராத்திரில இங்க என்ன பண்றீங்க?

என் பின்னாடி ஒளிஞ்சுக்குங்க, மாஸ்டர்!

நீ...நீங்க கட்டில்ல இருக்கலையா?

இல்லப்பா... தூக்கம் வரமாட்டேங்குது. அதான் சின்னதா ஒரு வாக் போய்ட்டு வந்தேன். நீங்க சொன்னது சரிதான் மந்திரி. நான் அந்த காப்பிய குடிச்சிருக்கப்படாது! அதுசரி, இந்த நேரத்துல நீங்க என்ன செய்யுறீங்க இங்க?


அதுவந்து, நா.. இந்த வழியா போய்க்கிட்டு..

நெலம சரியில்ல மாஸ்டர். புடிங்க ஓட்டம்!!

என்னோட கட்டில்! என்னோட கட்டில காணோம்!! எவனோ திருடிட்டான்!!!


Page 007
----------------------

ஏதாவது ஒரு வழி இருக்கும்...


நிச்சயம் இருக்கும்!!

ஐயோ!

நாளைக் காலைல மறுபடியும் முயற்சிப்போம்!

என்னோட கை! பாருங்க மாஸ்டர், எப்டி கன்னிப்போயிருச்சுன்னு!

அடுத்தநாள் காலை...

வந்துட்டீங்களா, மதி மந்திரி?

அப்டியே இருங்க... அசையாதீங்க!

''அட்ராசக்கஅல்ட்ராசிட்டி, கண்காணாமக்கரைஞ்சுபோயிடுகண்காணாமக் கரைஞ்சுபோயிடுகண்காணாமக் கரைஞ்சு.. ''

இதப் பாருங்க மதி மந்திரி... இந்த வேடிக்கைய..

உங்க மூஞ்சியப் பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது!

அம்புட்டுதானா நீங்க சொல்லவந்தது மதி மந்திரி?

கண்ணாடிக்கு முன்னாடியா நான் மந்திரத்த சொல்லியிருக்கேன்? கொஞ்சம் மிஸ்ஸாயிருந்தா நானே மறைஞ்சிருப்பேனே?... ஆத்தாடீ..!


இதுக்கு ஒரு விடிவே இல்லியா?

ஓ...ஹே... இதப்பத்தி நான் ஏன் சிந்திக்காம வுட்டுட்டேன்?

எங்கேப்பா இருக்கே, ஜால்ரா பாய்?



Page 008
----------------------


டொங்ங்க்க்க்!!

இதோ, இங்கேதான் மாஸ்டர்!

கலீபாவ காணாமடிக்க நீதான் சரியான ஆள் ஜால்ரா பாய்! உன்னத்தான் அவரால பார்க்கவே முடியாதே!


நான் என்ன பண்ணணும் மாஸ்டர்?



அது ரொம்ப ஈஸி ஜால்ரா பாய்! கலீபா முன்னாடி போய் நின்னுக்கிட்டு இத சொல்லணும்...


''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..''


புரிஞ்சுதா?

புரிஞ்சாமாதிரிதான் இருக்கு!

''அட்ராசக்க அல்ட்ரா சிட்டி, கண்காணாமக் கரைஞ்சுபோயிடு.. கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..


கண்காணாமக் கரைஞ்சுபோயிடு..''  சர்தானே?

சூப்பர்ர்ர்!!


மாஸ்டர் எங்கேருக்கீங்க..? ஹூ...ய்ய்ய்!

எ.. என்..னனன???

பின்னர்-


ஆமா, இந்தக் கதவ ஆணிவச்சு அடைச்சுட்டோம் மதிப்புக்குரிய மா மான்னரே! இந்த அறைக்குள்ளாற சைத்தான் புகுந்துக்கிச்சு... பாத்திரம் பண்டம்லாம் பறக்குது...


டொய்ய்ங்ங்க்!

டமாமார்!

க்ராரா..ஷ்!


நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்! அதுசரி, மதி மந்திரிய எங்கே காணோம்? அவருக்குத்தான் மந்திரவித்தைகள் அத்துப்படியாச்சே! இதுக்கு என்ன செய்யணும்னு அவருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்!!



நிறுத்துங்க மாஸ்டர்! என்ன உங்களால பார்க்கமுடியாதுன்னு என்னப் பார்த்தாலே தெரியுதுல்ல உங்களுக்கு?

முற்றும்

3 comments:

  1. நல்ல முயற்சி, பொடியன்!

    நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறீர்கள்! பேச்சு வழக்கிலான வசனங்களையே பெரும்பாலும் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது!

    இனிவரும் வாய்ப்புகளில் இன்னும் சிறப்பாய் மொழிபெயர்த்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி விஜய். சிறுவயது முதலே நமது காமிக்ஸ்களையும், ஆசிரியரின் ஹாட் லைன்களையும் படித்து வளர்ந்ததால்தான் ஏதோ என்னாலும் எழுதமுடிகிறது. எல்லாப்புகழும் ஆசிரியர் திரு.எஸ்.விஜயனுக்கே!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பொடியன்! புது ப்ளாக்ல பட்டைய கிளப்பணும்!

    ReplyDelete